தகுதியான வீரர்கள் இந்திய அணியில் இல்லை - முன்னாள் கேப்டன் விமர்சனம்

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (21:35 IST)
தகுந்த வீரர்களுடன் ஐசிசி சென்று கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கலந்து கொள்ளாததே இந்தி அணி வெளியேற காரணம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

ஐசிசி தொடருக்கான இந்திய அணியின் தேர்வு சரியாக அமையவில்லை ., வீரர்கள் தங்களை கண்டிசனுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், 2014 ஆம் ஆண்டு யுரவராஸ் சிங்  டெத் ஓவரில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வி அடைந்தாகவும் 2019 ஆண்டு உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் பேட்ஸ் மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதாக தெரிவித்துள்ளார். அத்துடன்,  எல்லா போட்டிகளுக்கு பி திட்டமும் தேவை, ஏ திட்டத்தை வைத்துக்கொண்டு எங்கும் சென்று விளையாட முடியாது எனவும் அனைத்து சவால்களை ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்