இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. இதனை அடுத்து 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது