குடியுரிமை சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு பக்கம் அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் பாஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணிகள் மற்றும் மிஸ்டுகால் ஆகியவைகளை நடத்தி வருகின்றனர். இந்த இரு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை நடுநிலை உள்ள பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்
இந்த பேரணியின் முடிவில் ராதாரவி பேசியபோது ’இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து அவர் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்களை ஏற்போம் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் செய்வோம். ஆனால் அதே நேரத்தில் இலங்கை தமிழர்களை இந்தியராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராதாரவி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது