உலக மகளிர் குத்துச்சண்டை: பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

Webdunia
திங்கள், 16 மே 2022 (21:03 IST)
உலக மகளிர் குத்துச்சண்டை: பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா தனது பதக்கத்தை உறுதி செய்துள்ளதை அடுத்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது 
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வீராங்கனை சார்லி டேவிட்சன் என்பவரை இந்திய அணியின் நிக்கத் ஜரீன் வீழ்த்தினார். இதனை அடுத்து அவர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும் அவருக்கு வெண்கலம் கிடைக்கும் என்பதால் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்