இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில், ரெய்னா இது குறித்து கருத்து கூறினார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்திய கிரிக்கெட்டுக்காக கோலி செய்துள்ள பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது. அவரது சாதனைகள் பாரத ரத்னா விருதுக்கு தகுந்தவை,” என்றார்.
36 வயதான கோலி, கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றார். தற்போது டெஸ்டிலிருந்தும் விலகியுள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள், 30 சதங்கள், 7 இரட்டை சதங்கள் உள்ளிட்ட சாதனைகள் அவரது பெயரில் உள்ளன. 10,000 ரன்கள் நிறைவு செய்யும் முன்பே ஓய்வை அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு சோகமளிக்கிறது.