3வது ஒருநாள் போட்டி.. ஒரு ரன்னில் அவுட்டான ரோஹித் சர்மா.. ஸ்கோர் எவ்வளவு?

Siva
புதன், 12 பிப்ரவரி 2025 (14:47 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில்  டாஸ் வென்று, இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து, இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கிய நிலையில், கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா, இந்த போட்டியில் ஒரே ஒரு ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தற்போது, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி விளையாடி வருகின்றனர். ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரானா, குல்திப் யாதவ், அர்ஷ்தீப் சிங்

இங்கிலாந்து அணி: சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், டாம் பண்டன், லிவிங்ஸ்டோன், அட்கின்சன், அதில் ரஷித், மார்க்வுட், சாகுப் முகமது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்