இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்து வரும் ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
பாதுகாவலர்கள் சூழ வந்த கோலி, திடீரென ஒரு பெண் ரசிகயைக் கட்டியணைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ரசிகைக்காக கோலி இப்படி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.