இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் நல்ல நேரம்! - பிரான்சில் பிரதமர் மோடி!

Prasanth Karthick

புதன், 12 பிப்ரவரி 2025 (09:15 IST)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் சிஇஓ கருத்தரங்கில் பேசிய இந்திய பிரதமர் மோடி, பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இது சரியான தருணம் என அழைப்பு விடுத்துள்ளார்.

 

பாரிஸில் நடஒபெற்ற 14வது இந்தியா - பிரான்ஸ் சிஇஓ கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். அங்கு பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரானும், பிரதமர் மோடியும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். 

 

அப்போது பேசிய பிரதமர் மோடி “இந்தியா வருவதற்கு இதுவே சிறப்பான தருணம் என்பதை உங்களிடம் கூறிக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது. சிறந்த உதாரணமாக ஏவியேஷன் துறையை சொல்லலாம். இந்திய நிறுவனங்கள் அதிக விமானங்களை வாங்க முன்பதிவு செய்துள்ளன. மேலும் 120 புதிய விமான நிலையங்களை திறக்க இருக்கிறோம். இதை வைத்தே எதிர்கால சாத்தியங்களை நீங்கள் புரிந்துக் கொள்ள முடியும்” என அவர் கூறினார்.

 

மேலும் பிரான்ஸின் துல்லியமும், இந்தியாவின் வேகமும் இணையும்போது வணிக நிலப்பரப்பில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவிலும் மாற்றம் ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்