ஆப்கானிஸ்தான் வீரர் அபார சதம்: இந்தியாவுக்கு 253 ரன்கள் இலக்கு

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (22:09 IST)
ஆசிய விளையாட்டு போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, தொடக்க ஆட்டக்காரர் முகமது சாஜித் அபார சதத்தால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. முகமது சாஜித் 116 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்

இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கேகே அஹ்மது, சாஹர், ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி சற்றுமுன் வரை 13.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றி பெற 171 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்