ரோஹித் & கே எல் ராகுல் அதிரடி !இந்திய அணி 163 சேர்ப்பு !

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (14:13 IST)
நியுசிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுப்பதால் ரோகித் சர்மா கேப்டன் ஆகிறார். அதேபோல் ஏற்கனவே நான்காவது டி20 போட்டியில் காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்த போட்டியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த அணிக்கு செளதி தலைமை ஏற்கிறார்.

இந்திய அணிக்கு ராகுலும் சஞ்சு சாம்சனும்  தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். சாம்சன் 2 ரன்களில் அவுட் ஆக அதன் பின் வந்த கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் கைகோர்த்தார் ராகுல். இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்க ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. அதன் பின் ராகுல் 45 ரன்களில் அவுட் ஆக, அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். கடைசி நேரத்தில் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர் அடிபட்டு எதிர்பாராத விதமாக வெளியேற வேண்டிய சூழல் உருவானது.

அதன் பின்னர் வந்த ஷிவம் துபேவும் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினர். இதனால் இந்திய அணியால் பெரிய ஸ்கோர் எட்டமுடியாமல் போனது. கடைசி நேரத்தில் மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாட இந்திய அணி 163 ரன்கள் சேர்த்தது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்