சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (07:15 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டாலும், தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணி வீரருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய நிலையில் , ரோஹித் சர்மா மிக அபாரமான தொடக்கத்தை வழங்கினார். அவர் 76 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஜடேஜா, அதிரடியாக வின்னிங் ஷாட்டை விளாசி,  இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
 
இந்த நிலையில், இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்த தொடரில் 263 ரன்கள் எடுத்ததுடன், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 
நியூசிலாந்து அணிக்கு கோப்பை பறிபோனாலும், தொடர் நாயகன் விருது கிடைத்துள்ளது என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்