சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டியில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை பந்து வீச்சில் அதிரடி காட்டி அதிர செய்துள்ளது இந்திய அணி.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தனர். முதலில் பேட்டிங் இறங்கிய வில் யங் (15), ரச்சின் ரவீந்திரா (37) குறைந்த ரன்களில் அவுட்டான நிலையில் கேன் வில்லியம்சனும் 11 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து நின்று விளையாடிய டேரில் மிட்செல் 101 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அவருக்கு பிறகு கடைசி நேரத்தில் களமிறங்கிய மிக்கெல் ப்ரேஸ்வெல் 53 ரன்களை குவித்தார்.
ஆனால் இந்தியாவின் அபாரமான பந்துவீச்சால் உடனடியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழாவிட்டாலும் ரன்களை சேர்க்க நியூசிலாந்து திணற வேண்டி வந்தது. அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில், ஷமி 1 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தற்போது 252 ரன்கள் டார்கெட் என்ற கணக்கில் இறங்கும் இந்தியாவிற்கு இது சேஸ் செய்யக்கூடிய டார்கெட்தான் என்பதால் வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K