இந்த இருவருக்காக சீனியர் வீரர்களை நீக்கலாம்…. ஹர்பஜன் சிங் கருத்து!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (10:48 IST)
இஷான் கிஷான் மற்றும் பிருத்வி ஷா ஆகியோருக்காக சீனியர் வீரர்களை கூட நீக்கலாம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இளம் வீரர்களான பிருத்வி ஷா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்நிலையில் இருபது ஓவர் உலகக்கோப்பை விரைவில் நெருங்கி வரும் நிலையில் இவர்கள் இருவரும் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் ‘இஷான் கிஷான் மற்றும் பிருத்வி ஷா இல்லாத டி 20 உலகக்கோப்பையை நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் இருவருக்காகவும் சரியாக விளையாடாத சீனியர் வீரர்களை கூட நீக்கலாம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்