குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 2 ஜனவரி 2025 (16:32 IST)
குகேஷ் உள்பட நான்கு பேருக்கு கேல் ரத்னா விருதை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் , துப்பாக்கி சூடுதல் வீராங்கனை மனு பாக்கர்,  ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்ஸ் பிரவீன் குமார் ஆகிய நால்வருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாலையில் ஜனவரி 17ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கேல் ரத்னா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன் தொடரில் வெற்றி பெற்று பட்டம் பெற்றார் என்பதும் இளம் வயதில் உலக சாதனை விருது பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களை இந்தியாவுக்காக பெற்று சாதனை செய்தார்.
 
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன் சிங் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் பெற்று இந்திய அணியை வழிநடத்தியவர். அதேபோல் உத்தர பிரதேசச் சேர்ந்த பிரவீன் குமார் தடகள வீரர் என்பதும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்