ஓய்வறையில் நடந்தது அங்கேயே இருக்கட்டும்.. அணிக்குதான் முக்கியத்துவம்- கம்பீர் பதில்!

vinoth
வியாழன், 2 ஜனவரி 2025 (15:44 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலை வகிக்கிறது. நாளை சிட்னியில் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறங்கி ஆடுவார் என்று சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவுக்கும் கம்பீருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது கம்பீர் இது குறித்து விளக்கமளிக்கும் விதமாக “ஓய்வறையில் நடந்த விஷயம் அங்கேயே இருக்கட்டும். எந்தவொரு மாற்றமும் நேர்மையாக நடக்கவேண்டும். ஒருவரின் செயல்தான்  அவரை அணியின் ஓய்வறையில் இருக்க வைக்கும். நான் எந்தவொரு வீரரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தனிப்பட்ட வீரர்களை விட அணிக்குதான் முக்கியத்துவம்” எனக் கூறியுள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் முடிந்ததும் ஓய்வறையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், அணி வீரரகளைக் கோபத்தில் கண்டபடி திட்டியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தோல்விகளால் அதிகம் விமர்சிக்கப்படும் ஆளாக கம்பீரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்