ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள்: குஜராத் பள்ளி மாணவர் சாதனை!

Mahendran
புதன், 25 செப்டம்பர் 2024 (13:16 IST)
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 
 
குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் உள்ள ஷிவாய் கிரிக்கெட் மைதானத்தில் திவான் பல்லுபாய் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 19 வயதிற்குட்பட்டவருக்கான இந்த போட்டியில், செயின்ட் சேவியர்ஸ் அணிக்காக விளையாடிய 18 வயது துரோணா தேசாய் என்ற மாணவர் 498 ரன்கள் அடித்து விலாசி சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 
 
இதனால், இந்திய அளவில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து மாணவர் துரோணா தேசாய் கூறுகையில், "நான் பேட்டிங் செய்தபோது ஸ்கோர் போர்டு எதுவும் எனது கண்ணுக்கு தெரியவில்லை. 498 ரன்கள் அடித்தேன் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. 
 
அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்து அடித்துக்கொண்டே இருந்தேன். அதனால், 500 ரன்களுக்கு இரண்டு ரன்கள் குறைவாக இருப்பதே எனக்கு தெரியாது, எனது விக்கெட்டை இழந்தேன். இருப்பினும், நான் எடுத்த இந்த ரன்களுக்கு மகிழ்ச்சி அடைகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்