வசூலில் கலக்கும் லப்பர் பந்து… இதுவரையிலான வசூல் எவ்வளவு?

vinoth

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:15 IST)
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் ‘லப்பர் பந்து’ இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி சீரிஸில் நடித்து புகழடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்க மற்ற துணை கதாபாத்திரங்களில் பால சரவணன், ஜென்சன் திவாகர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து மனித உணர்வுகளைப் பேசிய இந்த படம் வெளியானது முதலே பாராட்டுகளைப் பெற்றது. ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் பல காட்சிகளை விசிலடித்துக் கொண்டாடி மகிழ்ந்து பாராட்டி ரசித்து மகிழ்கின்றனர். இதையடுத்து கடந்த வாரம் ரிலிஸான ஆறு படங்களில் லப்பர் பந்து  மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த படம் தமிழக விநியோக உரிமை 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதை இன்னும் சில நாட்களில் எடுத்துவிடும் என சொல்லப்படுகிறது. அதனால் அதன் பிறகு வரும் வசூல் முழுவதும் விநியோகஸ்தருக்கு லாபம்தான் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் திரையரங்குகள் மூலமாக இந்த படம் பெரியளவில் கலெக்‌ஷன் எடுக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்