விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே! – கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (09:25 IST)
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே விபத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே 90களில் உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் ஆவார். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஷேன் வார்னே தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,

இந்நிலையில் தனது மகனுடன் ஷேன் வார்னே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்