108 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சாதனை படைக்குமா இங்கிலாந்து கிரிக்கெட் அணி.. நாளை தெரியும்..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (20:17 IST)
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் 108 ஆண்டுகால வரலாற்று சாதனை மீண்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெலிங்டனில் நடந்து வரும் இந்த டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 435 ரன்கள் எடுத்த போது டிக்ளர் செய்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸில் 483 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 258 ரன்கள் இலக்கு என்ற நிலையில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது
 
நாளை ஐந்தாவது நாளில் இங்கிலாந்து அணி 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றால் 108 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி என்ற பெருமையை பெறும். 
 
இதற்கு முன்னர் இங்கிலாந்து கடந்த 1913 - 14 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெளிநாட்டு மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்