தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

Siva

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (07:05 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் திரில்லான வெற்றியை பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியமாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார்.
 
அதனைத் தொடர்ந்து 167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை வழங்கினர். ஆனால் தொடக்கத்திற்குப் பிறகு ராகுல் திரிபாதி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் குறைந்த ரன்களில் அவுட்டானார்கள். ஷிவம் துபே மிகவும் பொறுமையாக விளையாடி வெறும் சிங்கிள் மட்டுமே எடுத்தார்.
 
இந்தச் சூழ்நிலையில் எம். எஸ். தோனி களத்தில் வந்து 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பினார். இறுதியில் சிஎஸ்கே அணி 19.3 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிஎஸ்கே அணியானது இப்போதும் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது என்றாலும், இன்னும் ஒரே ஒரு வெற்றியால் அந்த இடத்திலிருந்து வேகமாக உயர வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்