இங்கிலாந்துக்கு மீண்டும் தோல்வியா? 124 ரன்களில் 7 விக்கெட் இழப்பு..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (16:19 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பம் முதலே மோசமாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் 26.2 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது.  அந்த அணியை சற்று முன் 26 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
இதேரீதியில் சென்றால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கூட தொடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்கு போட்டியில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய போட்டியிலும் தோல்வி அடைந்தால் அந்த அணி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்படும்.
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்