உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி!

வியாழன், 26 அக்டோபர் 2023 (06:51 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் அந்த அணி மிக அபாரமாக விளையாடி 399 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். பின் வரிசை வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல் மிக அபாரமாக 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.  அவர் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 90 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 309 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரிலேயே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்