பான் கார்டு தொலைந்து விட்டதால் தனக்கு உதவி செய்யும்படி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்த நிலையில் இந்திய வருமானவரித்துறை அவருக்கு உதவி செய்துள்ள தகவல் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது பான் கார்டு தொலைந்து விட்டதாகவும் விரைவில் தான் இந்தியா வர உள்ளதால் தனக்கு உதவி செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இந்திய வருமான வரித்துறை ஒரு லிங்க் ஐ அனுப்பி உங்களிடம் பான் கார்ட் விபரங்கள் இருந்தால் இந்த லிங்க் மூலம் உங்களுக்கு புதிய பான் கார்டு கிடைக்கும் என்று பதிவு செய்துள்ளது. இதனை அடுத்து அவர் இந்திய வருமான வரித்துறைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.