ரூ.222 கோடி: 2020 ஐபிஎல் ஸ்பான்சரான ட்ரீம் லெவன் !!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (15:27 IST)
ஐபிஎல் ஸ்பான்சராக ரூ.222 கோடிக்கு ட்ரீம் லெவன் நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.  
 
இந்தியாவில் சீன செயலிகள், நிறுவனங்கள் பல தடை செய்யப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த சீன செல்போன் நிறுவனமான விவோவும் விலக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் இடம் காலியாக இருந்தது. 
 
இந்நிலையில் ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் 11 நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. ஆம், பிசிசிஐ நடத்திய ஏலத்தில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை 222 கோடி ரூபாய்க்கு வென்றுள்ளது. டாடா நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கும், பைஜூஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கும் ஏலம் குறிப்பிட்டிருந்தனர் எனப்து குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்