இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ‘சிறுநகரங்கள், கடைக்கோடி நகரங்களில் இருந்து வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள் என்றால் அதற்கான கதவுகளை திறந்துவிட்டது தோனிதான்.’ எனக் கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.