ஈட்டி ஏறிதல் வீரர் தவீந்தர் சிங்கிற்கு 4 ஆண்டுகள் தடை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் நடவடிக்கை

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (18:36 IST)
கிராண்ட் ப்ரீ தடகள போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய ஈட்டி ஏறிதல் வீரர் தவீந்தர் சிங்கிற்கு 4ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச தடகள சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
 
29 வயதாகும் இந்தியா வீரர் தவீந்தர் சிங்கிற்கு கடந்தாண்டு நடைபெற்ற கிராண்ட் ப்ரீ தடகள போட்டியின் போது ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.
 
இந்த சோதனையில் ரவிந்தர் சிங் மரிஜுவானாவை என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தினார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சர்வதேச தடகள சம்மேளனம் தவீந்தர் சிங்கிற்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்தாண்டு நடைபெரும் கிராண்ட் ப்ரீ தடகள போட்டியிலிருந்து தவீந்தர் சீங்கின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்