திருப்பதி கோவிலில் பணிபுரியும் வேற்று மத ஊழியர்களை நீக்க ஐதராபாத் ஐகோர்ட் தடை

வியாழன், 22 பிப்ரவரி 2018 (08:00 IST)
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்று மத ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைக்கு ஐதராபாத் ஐகோர்ட் தடை விதித்துள்ளது
 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக வேற்றுமத ஊழியர்களை பணியில் சேர்ப்பதில்லை என்றாலும் அதற்கு முன் பணியில் சேர்ந்த சுமார் 45 வேற்றுமத ஊழியர்களை நீக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்கான நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த 45 ஊழியர்களும் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்
 
தாங்கள் வேற்று மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்து மதத்துக்கு அளிக்க வேண்டிய மதிப்பை அளித்து வருவதாகவும் எனவே தங்களை பணியிலிருந்து தேவஸ்தானம் நீக்க தடை விதிக்க வேண்டும் என்றும் தங்கள் மனுவில் 45 ஊழியர்கள் கூறியிருந்தனர். 
 
இந்த வழக்கை விசாரித்த ஐதரபாத் ஐகோர்ட் 45 பேரையும் பணியில் இருந்து நீக்க தடை விதித்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்