நெதர்லாந்துக்கு எதிரான போட்டி.. டேவிட் வார்னர் அபார சதம்..!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (17:17 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவர்  93 பந்துகளில் 104 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்று முன் வரை ஆஸ்திரேலியா அணி  41 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்துள்ளது என்பது உட்படத்தக்கது. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 6 புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்