ஒருத்தன் வந்தா படை நடுங்கும்! மாஸ் காட்டிய ரொனால்டோ! – புதிய சாதனை!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:08 IST)
நேற்று கானா நாட்டிற்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அடித்த கோல் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ.

இந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளின் லீக் சுற்றுகள் தற்போது நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் போர்ச்சுக்கல் – கானா அணிகள் மோதிக் கொண்டன.

இந்த போட்டியில் போர்ச்சுக்கல் தரப்பில் முதல் கோலை அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார் ரொனால்டோ. அதை தொடர்ந்து இரண்டு தரப்பிலும் தலா இரண்டு கோல்கள் பதிவாகின. கடைசி 30 நிமிடத்திற்குள் பரபரப்பான இந்த போட்டியில் போர்ச்சுக்கல் அணி 3-2 என்ற கணக்கில் கானாவை வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அடித்த முதல் கோல் மூலமாக தொடர்ந்து 5 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றவரும், 5 உலகக்கோப்பை போட்டிகளிலும் கோல் அடித்தவருமான ஒரே வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதை ரொனால்டோ ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்