இந்த தொடரின் ஐகான்களில் ஒருவராக இருக்கிறார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள அவரின் சக வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா “அனைவரு தோனியின் பிட்னெஸ் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவரின் ஷாட் ஆடும் திறனும், பேட்டின் வேகமும்தான் அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடக் காரணம். அவர் ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னை வந்து தினமும் 3 மணிநேரம் பயிற்சி செய்கிறார். அவர் இன்னும் ஒரு சீசனாவது ஆடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.