இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

சனி, 22 மார்ச் 2025 (07:52 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவராவது ஆர் சி பி அணியின் சோக வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆர் சி பி அணிக் குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் “எனக்கு கோலிக்கோ அல்லது ஆர் சி பி அணி ரசிகர்களுக்கோ எதிரானவன் இல்லை. ஆனால் இந்த ஆண்டு அந்த அணிதான் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடிக்கும் என நினைக்கிறேன். அந்த அணியில் அதிகளவில் இங்கிலாந்து வீரர்கள் இருப்பதினாலேயே அவர்கள்  கடைசி இடத்துக்குத் தள்ளப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்