அந்த முடிவில் நாங்கள் தெளிவாக இருந்தோம்… கோலிக்கு எதிராக கருத்து கூறிய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர்!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (09:35 IST)
கோலி லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோலி அளித்த வீடியோ நேர்காணல் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரைக் கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.

இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு மூலப்புள்ளியாக இருந்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா இப்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில் ‘நாங்கள் விராட் கோலி டி 20 கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விலகியபோது அதை மறுபரிசீலனை செய்ய சொன்னோம். ஆனால் அவர் முடிவில் உறுதியாக இருந்தார். அதன் பின்னர் நாங்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு ஒரே கேப்டன்தான் என்பதில் உறுதியாக இருந்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்