சவுரவ் கங்குலியின் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

புதன், 29 டிசம்பர் 2021 (15:38 IST)
சமீபத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலியின் உடல் நிலை குறித்து கொல்கத்தா தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
 
மேலும் அவர் நன்றாக தூங்கியதாகவும் காலை உணவு மதிய உணவு ஆகியவற்றை சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தங்கள் உடல்நிலை தேறி விரைவில் ரீசார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்