டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 ஓவர் போட்டியில் திண்டுக்கல் அணியை துவம்சம் செய்த சேப்பாக்..!

Siva
திங்கள், 15 ஜூலை 2024 (09:15 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. இந்த போட்டியின் போது மழை பெய்ததால் ஏழு ஓவராக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் தானே ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை பறிகொடுத்த நிலையில் இறுதியில் ஆறு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து ஏழு ஓவரில் 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணி முதல் பந்திலேயே சந்தோஷ்குமார் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் மற்றும் கேப்டன் அபராஜித் இருவரும் அபாரமாக விளையாடி இலக்கை எட்டினர்.

சேப்பாக்கம் 4.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது சேப்பாக் அணி இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளதால் நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. லைக்கா கோவை அணி முதல் இடத்திலும், திருச்சி அணி இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்