ப்ரேக் டான்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பு!!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (11:41 IST)
பாரீஸ் நகரில் வரும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சில போட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. 
 
பாரீஸ் நகரில் வரும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடிவாகி உள்ளது. இதில், முதல் முறையாக நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரேக்டேன்சிங் ஒரு போட்டியாக சேர்க்கப்பட உள்ளது.
 
அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஸ்கேட் போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் சர்பிங் ஆகிய போட்டிகளும் முதன் முறையாக நடத்தப்படும். இதனை தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக்கிலும் இந்த போட்டிகள் தொடரும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயல் வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்