ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பேட்ஸ்மேன் ரிங்குசிங், சமாஜ்வாதி ஜனதா கட்சி எம்எல்ஏ மகளை திருமணம் செய்யப்போவதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ துஃபானி என்பவரின் மகள் ப்ரியா சரோஜ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக ரிங்குசிங் காதலித்து வருவதாகவும், இருவரும் தங்கள் பெற்றோரிடம் திருமணம் செய்ய அனுமதி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதை அடுத்து, இரு தரப்பு பெற்றோரும் இந்த திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், ரிங்குசிங் - ப்ரியா சரோஜ் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்பட்டாலும், இதனை பெற்றோர்கள் மறுத்துள்ளனர். விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும், திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.