டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்தியுள்ளார்.
ஆஸிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் போட்டியில் நேற்று பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான ஒரு இன்னிங்ஸை விளையாடி இங்கிலாந்தை வெற்றிப் பெற செய்தார். இந்த இன்னிங்ஸில் முதலில் மிகவும் நிதானமாக விளையாடிய அவர் 9 ஆவது விக்கெட்டுக்குப் பின் விஸ்வரூபம் எடுத்தார்.
கடைசி 74 ரன்களை அவர் வெறும் 42 பந்துகளில் சேர்த்தார். இந்த இன்னிங்ஸின் போது அவர் மொத்தமாக 8 சிக்ஸர்களை விளாசினார். இது நான்காவது இன்னிங்ஸில் ஒரு வீரர் அடித்த மூன்றாவது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2001-ல் நாதன் ஆஸ்டில் 11 சிக்ஸர்களும் 2008-ல் டிம் சவுத்தி 9 சிக்ஸர்களும் அடித்தனர். ஆனால் அந்த போட்டிகளை அவர்களால் வென்று கொடுக்க முடியவில்லை.
பென் ஸ்டோக்ஸுக்குப் பிறகு ஹேன்சி குரோனியே, ஷாகித் அப்ரீடி, கிறிஸ் கெய்ல் ஆகியோர் தலா 6 சிக்ஸர்களும், சேவாக் 4 சிக்ஸ்களும் கங்குலி 3 சிக்ஸ்களும் அடித்துள்ளனர்.