இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாபுசாங்கே 74 ரன்களும், வார்னர் 61 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் மூன்று ஓவர்கள் மந்தமாக சென்று கொண்டிருந்த நிலையில் 4வது ஓவரில் இருந்து விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தது. அந்த அணியின் டென்லி எடுத்த 12 ரன்கள் தான் அதிகபட்ச ரன்கள் ஆகும். இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.