6 விக்கெட்டுக்களை இழந்தது ஆஸ்திரேலியா.. சிராஜ், ஷமி அபார பந்துவீச்சு..!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (16:37 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி நேற்று 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று ஸ்டீவ் ஸ்மித்  சதம் அடித்தார் என்பதை பார்த்தோம்.
 
 இந்த நிலையில் சற்றுமுன் வரை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், எடுத்துள்ளனர். தற்போது மிட்செல் ஸ்டார்க் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்
 
இன்றைக்குள் ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தாலும் 500 ரன்களை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்