சதத்தை நெருங்கும் உஸ்மான் காவஜா.. ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர்..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (16:09 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரராக காலம் விளங்கிய உஸ்மான் காவஜா சதத்தை நெருங்கியுள்ளார். அவர் 14 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 மேலும் கேமெரூன் கிரீன் 25 ரன்கள் அடித்துள்ளார். சற்று முன் வரை ஆஸ்திரேலியா 83 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவின் முகம்மது ஷமி 2 விக்கட்டுகளையும் அஸ்வின் ஒருவிக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்