இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டி நான்கே நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 414 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடியது.
இதனை அடுத்து அந்த அணி வெற்றி பெற 75 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்தால் போதும் என்ற நிலையில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் 156 ரன்கள் எடுத்த அலெக்ஸ் காரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்த தொடரின் சிறந்த வீரராக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார் என்பதும், அவர் 272 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.