நேற்று நடைபெற்ற குவாலிபயர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த அணி ஏற்கனவே இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் விளையாடியது. 19.2 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.