தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 26 ரன்கள் அடித்த நிலையில், இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 65 ரன்கள் எடுத்தார். இதில் பல பௌண்டரிகள் அடங்கும். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவுட் ஆன பின்னர் தற்போது ஜோ ரூட் மற்றும் ஹேரி ப்ரூக் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர்.
சற்று முன் வரை, இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை பெற்றுள்ளனர்.