உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி!

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (07:45 IST)
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்பட்டுள்ள அணியில் முதல் இடத்தில் உள்ளது இங்கிலாந்து அணிதான். சொந்த நாட்டில் போட்டி நடைபெறுவது, வீரர்கள் அனைவரும் ஃபார்மில் இருப்பது ஆகிய உள்பட பல காரணங்கள் இதற்கு கூறப்படுகிறது. ஆனால் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 297 ரன்கள் குவித்தது. ஸ்மித் மிக அபாரமாக விளையாடி 102 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 43 ரன்களும், மார்ஷ் மற்றும் காரே தலா 30 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 198 ரன்கள் எடுத்த இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 285 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது வின்ஸ் 64 ரன்களும், பட்லர் வோக்ஸ் 40 ரன்களும், ராய் 32 ரன்க்ளும் எடுத்தனர்.
 
இன்று வங்கதேசம் - பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்