உலகக் கோப்பை அணியில் அஸ்வின் ஜடேஜா இல்லை; பிசிசிஐ சூசக கருத்து

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (18:56 IST)
இந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம் இல்லை என்று பிசிசிஐ சூசகமாக தெரிவித்துள்ளது.

 
தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தாலும் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல்முறை தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
 
உலக அரங்கில் இந்திய அணி மிக பலமான அணியாக வலம் வருகிறது. சூழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தொடந்து ஒருநாள் போட்டி அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.
 
தற்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் டெஸ்ட் அணிக்கான வீரர்களாக மாறிவிட்டனர். ஒருநாள் போட்டிக்கான அணியில் இவர்கள் இனி இடம்பெறுவது என்பது கடினமான காரியாம். குல்தீப் மற்றும் சாஹல் பந்துவீச்சில் மிரட்டி வருகின்றனர்.
 
குல்தீப், சாஹல் ஆகியோர் விராட் கோலியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனை உறுதி செய்யும் வகையில் பிசிசிஐ நிர்வாகம் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளது. அஸ்வின், ஜடேஜா இடத்தை குல்தீப் மற்றும் சாஹல் நிரப்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் பவுலிங் கோச் பாரத் அருண் கூறியதாவது:-
 
இவர்கள் அணியில் இருப்பார்களா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் இவர்கள் அதற்கான போட்டியில் கண்டிப்பாக இருக்கிறார்கள். அதே சமயம் சாஹலும், குல்தீப்பும் காயம காரணமாக விலகினால் மட்டுமே இவர்கள் உள்ளே வர முடியாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்