சிஎஸ்கே அணியில் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், தமிழக வீரர் அஸ்வின் அணியில் தக்கவைக்கப்படாடது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சில விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் ஆங்காங்கே காணப்பட்டது. இதையடுத்து தோனி சிஎஸ்கே-யில் மீண்டும் விளையாடுவது குறித்து பேசியுள்ளார்.