105 வருடமாக இருந்த ‘இந்தியன்ஸ்’ பெயர் நீக்கம்! – அமெரிக்க பேஸ்பால் அணியால் புது சர்ச்சை!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (11:36 IST)
கடந்த 105 வருடமாக பேஸ்பால் போட்டிகளில் நட்சத்திர அணியாக விளங்கி வரும் க்ளேவ்லேண்ட் அணி தனது பெயரிலிருந்து ‘இந்தியன்ஸ்’ என்ற பெயரை நீக்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் பேஸ்பால், கால்பந்து போன்ற விளையாட்டுகள் பிரபலமாக உள்ள நிலையில். ஒவ்வொரு மாகாணத்தை சேர்ந்த அணிகளும் தங்கள் அணிக்கு மாகாணம் சார்ந்த சிறப்பு பெயர்களை வைத்துள்ளன. அதுபோல க்ளேவ்லாண்டை சேர்ந்த பேஸ்பால் அணி தங்களது அணி பெயரை ‘க்ளேவ்லாண்ட் இந்தியன்ஸ்’ என வைத்துள்ளன. ஆனால் சமீப காலமாக அமெரிக்காவில் இன பாகுபாடுகளை காட்டும் அணிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு வருவதால் தங்கள் அணி இந்தியன்ஸ் என்று செவ்விந்தியர்களை குறிப்பதை மாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

முன்னதாக சீஃப் வாஹூ என்ற அணி தனது எம்பளமாக செவ்விந்தியர் ஒருவரின் கேலி சித்திரத்தை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த எம்பளம் நீக்கப்பட்டு சி என்ற ஆங்கில எழுத்து பயன்படுத்தப்பட்டது. கூடவே அந்த அணியின் ரசிகர்கள் செவ்விந்தியர்களை போல இறகுகளை தலையில் அணிதல் மற்றும் முகத்தில் சாயம் பூசி கொள்ளுதலும் தடை செய்யப்பட்டது

எனினும் செவ்விந்திய அடையாளம் கொண்ட அட்லாண்டா ப்ரேவஸ், கான்சாஸ் சிட்டி சீஃப், சிக்காகோ ப்ளாக் ஹாவ்க் ஆகிய அணிகள் தங்கள் பெயரை மாற்ற போவதில்லை என தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்