241 தான் இலக்கு.. மாயாஜாலம் செய்வார்களா இந்திய பவுலர்கள்?

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2023 (17:58 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில்  பேட்டிங் செய்தது.

இதில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்தில்  ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடித்து ஆடினாலும் அதனை அடுத்து கேஎல் ராகுல் நிதானமாக ஆடினார்

இருப்பினும்  சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா உள்ளிட்டோர் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 240 மட்டுமே வந்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் 240 என்பது மிகவும் குறைவான ஸ்கோர் என்றாலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா, ஷமி, குல்தீப்  யாதவ், சிராஜ், ஜடேஜா உள்ளிட்டோர் மாயாஜாலம் செய்து ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்