மொத்த மைதானத்தையும் அமைதி ஆக்கி காட்டுவேன்! – சொன்னதை செய்த பேட் கம்மின்ஸ்!

ஞாயிறு, 19 நவம்பர் 2023 (16:39 IST)
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை இறுதி போட்டியில் தான் சொன்னபடியே மைதானத்தை அமைதி ஆக்கி காட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை இறுதி போட்டி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் இந்தியா அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்துள்ளது. விராட் கோலி நிதானமாக விளையாடி ஒரு அரைசதம் வீழ்த்தி ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கோலியின் பேட் எட்ஜில் பட்டு ஸ்டம்ப்பில் அடிக்க விக்கெட் இழந்தார் விராட் கோலி. விராட் கோலியின் விக்கெட் போன அந்த சமயம் மொத்த க்ரவுண்டுமே கனத்த மௌனத்தில் ஆழ்ந்தது. போட்டிக்கு முன்னர் “மைதானத்தில் உள்ள 1.30 லட்சம் ரசிகர்களையும் அமைதிப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என்று சொன்ன பேட் கம்மின்ஸ், விராட் கோலி விக்கெட் மூலமாக அதை நிகழ்த்திவிட்டார்.

ஆனால் இது நிரந்தரமான மௌனமாக இருக்காது என்றும் இந்தியா தனது திறமையான பதிலடியால் வெற்றியை கைகொள்வார்கள் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்