இந்த ஆண்டு ஐபிஎல் ரத்தா? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (17:28 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் ரத்தா?
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஐபிஎல் போட்டி மாற்றப்பட்டது. ஆனால் மீண்டும் ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதை அடுத்து மே 15ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் மே மூன்றாம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அப்படியே ஊரடங்கு உத்தரவு இல்லை என்றாலும் திரையரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றுக்கு அரசின் அனுமதி கிடைக்காது என்பதால் தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பிசிசிஐ சற்று முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை அதிகாரபூர்வமாக தள்ளி வைப்பதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஐபிஎல் போட்டி தொடர் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பு குறைவு என்றே பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்